டென்னிஸ் தரவரிசை; ஆன்டி முரேக்கு முதலிடம்

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2ஆவது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கால்இறுதியில் வெளியேறிய செர்பியா வீரர் ஜோகோவிச் 4ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.

எதிர்வரும் சீசனில் ஜோகோவிச் விளையாடமாட்டாரென தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தர வரிசையில் மேலும் சரிவை சந்திக்க நேரிடும். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே 3 இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஹம்பர்க் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற அர்ஜென்டினா வீரர் லீனார்டோ மேயர் 89 இடங்கள் ஏற்றம் கண்டு 49ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு