யானை தாக்கி விவசாயி பலி – அம்பாறையில் சம்பவம்

அம்பாறை, அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆலையடிவேம்பு, கோளாவில் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வைரமுத்து நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் வழமைபோன்று காவல் கடமையின் நிமித்தம் பரன் குடிசை ஒன்றில் இவர் உறக்கத்திலிருந்தபோது யானை தாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு