நிறுத்தல் கருவிகளுக்கான முத்திரை – 51 இலட்சம் ரூபா வருமானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு சட்டபூர்வ முத்திரை இட்டதன் மூலம் கடந்த ஏழு மாதங்களில் சுமார் 51 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதென அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் கிரான் செங்கலடி மட்டக்களப்பு நகரம் கல்லாறு ரிதிதென்ன வாகரை கொக்கட்டிச்சோலை ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களின் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிட்டதன் ஊடாகவே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது களுவாஞ்சிக்குடி நகரில் முத்திரையிடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், ஓட்டமாவடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாழைச்சேனை ஆகிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் முத்திரையிடும் பணிகள் இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு