கடந்த அரசாங்கத்தின் ஊழல்களும் ஆராயப்பட வேண்டும் – அமைச்சர் விஜிதமுனி சொய்சா

கடந்த அரசாங்கத்தினால் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து ஆராயாமல் இருப்பது பிரச்சினைக்குரியதென அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், முன்னைய அரசாங்கத்தின் ஊழல் குறித்து ஆராயப்படாமல் இருப்பது தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் தவறு என்றும், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற ஊழல் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விசாரணை நடத்துகிறது. வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றையதினம் பிணைமுறி விநியோக மோசடி குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கினார். இவ்வாறான விடயங்கள் வரவேற்கப்பட வேண்டிய அதேநேரம் முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு