இலங்கை, ஆஸி., நியூஸிலாந்து முக்கோணக் கிரிக்கெட் சுற்று

இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இந்தியாவில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நேற்று கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 சர்வதேச போட்டிகள் இதன்போது இடம்பெறவுள்ள நிலையில், இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 ரி-ருவன்ரி போட்டிகள் அடங்குகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதிவரை ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று, ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்கு எதிராக நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 24ஆம் திகதி வரை மூன்று டெஸ்ட், மூன்று, ஒருநாள் மற்றும் மூன்று ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற உள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நியூஸிலாந்துக்கு எதிராக ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதிவரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி-ருவன்ரி போட்டிகளும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு