30,000 குடும்பங்கள் வரட்சியால் பாதிப்பு – முல்லை. அரச அதிபர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவின் வரட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வரட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வரட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாகவும், கொழும்பில் இருந்து கிடைக்கின்ற உதவிகளை வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு