வடக்கிலும் தெற்கிலும் முரணான கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள்

தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்கிசையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று கொண்டனர்.

ஆனால், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம், குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்று கொண்டது. இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை நன்கு புலப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு