மன்னாரில் மீட்கப்பட்டன சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பாதுகாப்புத்தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இவை இன்று மீட்கப்பட்டுள்ளன.

அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இநந்pலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளினால் குறித்த வெடி பொருட்கள் கடந்த காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட்களைச் செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில் படைத்தரப்பினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு