ரவி கருணாநாயக்க கைதாக வேண்டும் – பிரதீபன்

செய்திகள்

ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நிதி மோசடி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் கடினமான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊழல்களை ஒழிப்பதற்காகவே அரசாங்கத்தை மக்கள் மாற்றியுள்ளார்கள். தற்போது அமைச்சர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வேறு எவராவது நிதி மோசடியில் ஈடுபட்டால் கைது செய்து செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதால், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வகிக்கின்ற அமைச்சர் ரவி கருணாநாயக்கயின் இவ்வாறான செயற்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதெனத் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சு பதவிலிருந்து நீக்கி உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், நாட்டின் ஜனாதிபதியையும் பிரதமரையும் இவ்விடயம் தொடர்பாக கூடிய அக்கறைகாட்ட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.