ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர் கூட்டமைப்புப் பிரதிநிதிகள்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை அமைச்சர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்திப் பணிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன், யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்தி, நாட்டில் காணப்படும் இனவாதத்தை இல்லாதொழித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு