விரைவில் புதிய அரசாங்கம் உருவாகும்?

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் தற்போது முன்நோக்கி செல்லக்கூடிய நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சிலரை தற்போதைய அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்திவருவதாகவும் குமார் வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு