இன்று பகுதி சந்திர கிரகணம்

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இன்றைய பௌர்ணமி தினத்தில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று தோன்றவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் அவதானிக்க முடியும் எனவும், இன்று இரவு 9.20 ஆரம்பமாகும் இந்த கிரகணம், நாளை அதிகாலை 2.21 மணியுடன் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள், அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு