ஊழல் விடயத்தில் கண்டிப்பான செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது – சம்பிக்க

அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைக்கூட விசாரணைக்குட்படுத்தி வருவது இந்த அரசாங்கத்தின் கண்டிப்பான செயற்பாட்டை எடுத்துக் காட்டுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு இடமில்லை என்ற செய்தியை வழங்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து தரப்பினர் மீதும் விசாரணை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதியும், பிரதமரும் நன்றி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு