அமெரிக்காவைக் கடுமையாக எச்சரித்தது வடகொரியா

தமது நாட்டின் மீது புதிய பொருளாதார தடையினை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்கொண்ட அமெரிக்காவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அமெரிக்காவிற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் எனவும், பொருளாதார தடையின் மூலம் அணு ஆயுத திட்டம் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் திட்டமிட்டது போன்று முன்னெடுக்கப்படும் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை வடகொரியா முற்றாக நிராகரித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு