புதிய வரிச் சட்டமூலத்தைத் திருத்த நடவடிக்கை

புதிய தேசிய வருமான வரிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய வருமான சட்டமூலத்திலுள்ள ஒரு சில பிரிவுகள், அரசமைப்புக்கு அமைவானதல்லவென உயர் நீதிமன்றம், அண்மையில் அறிவித்திருந்தமைக்கு அமைவாக, தேசிய வருமான சட்டமூலத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பின் போது விஷேட பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

அவ்வாறு மேற்கொள்ள முடியாவிடின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம், சபாநாயகருக்கு அண்மையில் அறிவித்திருந்ததைத் தொடர்ந்தே, புதிய தேசிய வருமான வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நடைமுறையிலுள்ள வரிமுறைமையின் ஊடாக, குறைந்த வருமானம் பெறுவோர், பெரும் பாதிப்புகளுக்குள்ளாவதாகவும், அது அரச வருமானத்தில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய வரிச் சட்டம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்றம், அன்றிலிருந்து புதிய தேசிய வருமானவரி சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு