ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிரேரணையில் ராஜபக்ஷர்கள் கைச்சாத்திடவில்லை

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, கடந்த 3ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் கைச்சாத்திடவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அந்தப் பிரேரணையில் 33 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்த போதிலும், 32 உறுப்பினர்களே கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கையொப்பமிட்ட வரிசையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் எம்.பியுமான தினேஷ் குணவர்த்தன முதலாவதாக கையொப்பமிட்டுள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக, விமல் வீரவன்ச, குமார் வெல்கம ஆகியோர் முறையே 2ஆவது, 3ஆவதாகக் கைச்சாத்திட்டுள்ளனர்.

நான்காவதாகக் கையொப்படமிட்டுள்ள பந்துல குணவர்த்தன எம்.பி, கையொப்பமிட்டுள்ள தொடரிலக்கத்தில், நான்கு என்று எழுதுவதற்கு பதிலாக மூன்று என மீண்டும் எழுதியுள்ளார்.

அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில், ஒன்று, சம்பாதித்தமை தொடர்பிலான வழியை வெளிப்படுத்தாமல், 145 மில்லியன் ரூபாயை தனியார் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தமை பின்னர் அப்பணத்தை வீடொன்றை கொள்வனது செய்தமைக்காக செலுத்தியதன் ஊடாக, பணச்சலவை சட்டத்தை மீறியமை என்பனவையாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு