ஐ.நாவின் மேலும் இரு நிபுணர்கள் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் 02 விஷேட நிபுணர்கள் இலங்கைக்கான விஜயத்தை இந்த வருடம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான இரண்டு நிபுணர்கள் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், பலவந்தமாக தடுத்து வைத்தல் மற்றும் தீவிரவாத முறியடிப்பு சட்டமூலத்தின் அமுலாக்கத்தின் போது மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கான விஷேட குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இந்த விடயங்களுக்கு பொறுப்பான விஷேட அறிக்கையாளரும், ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப் பொதுச் செயலாளரும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு