கோப்பாய் தாக்குதல் விவகாரம்; 11 பேருக்கும் தொடர் விசாரணை

யாழ். கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர், கடந்த ஜுலை மாதம் 30ஆம் திகதி 12 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பில் ஏற்கனவே 05 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் நான்கு பேரும், யாழ்ப்பாணத்தில் 02 பேருமாக மொத்தம் 06 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதானவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு