சிறுகட்சிகள் விலகாது – பழனி திகாம்பரம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்த எந்தவொரு சிறுகட்சியும் அதிலிருந்து விலகப் போவதில்லையென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்பேவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ன கூறினாலும் 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை மாற்ற முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்று பெறுவோம், நாளை பெறுவோம் என்றார். பின்னர் நாமல் ராஜபக்ஷ அதனை சொல்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த, மஹிந்த ராஜபக்ஷவை வெகு விரைவில் பிரதமராக்குவோம் என்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியில் 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாங்கள் எப்போதும் கூட்டணியில் இருந்து வெளியேற போவதில்லை. இப்படியான நிலைமையில் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் திகாம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு