வேலையற்ற பட்டதாரிகள் வடக்கு முதல்வர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகம் ஆகியோரை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 35 வயது தொடக்கம் 45 வயதுக்கு இடையில், வடமாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களுடைய வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சர், மாவட்டச் செயலர் ஆகியோரை சந்தித்த போதிலும், சாதகமான முடிவு கிடைக்கவில்லை. அனைவரும் உரிய அதிகாரகளுடன் கதைப்பதாகவே தெரிவித்துள்ளனர். ந}ங்கள் அனைவரும் அசாதாரண சூழ்நிலையில், கடினத்துக்கு மத்தியில் கல்வி கற்றவர்கள். எனவே எமது நிலையை அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில், வேலையற்ற பட்டதாரிகள் மாவட்டச் செயலகம் முன்பாக 143 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஓராண்டு பயிற்சிக் காலத்துக்குட்பட்டவாறு மாவட்ட அடிப்படையில் நியமனங்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு அமைய கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் போராட்டத்தை தற்காலிகமாக, பட்டதாரிகள் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு