நைஜீரியாவில் 30ற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் பலி

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தநாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீது போகோஹராம் தீவிரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் செய்து குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக போக்கோஹராம் தீவிரவாதிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், கிராம பகுதிகளுக்குள் பிரவேசித்து அங்கு வசிக்கும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த எட்டு ஆண்டுகளாக சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு