அமெரிக்காவுக்கு வடகொரியா மீண்டுமொரு எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதலொன்றை நடத்த பரிசீலித்து வருவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வடகொரிய இராணுவத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்டதூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாகவும், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான இந்த தகவல் பரிமாற்றம் இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தீவிரமாக அதிகரித்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு