மத்தள விமான நிலையத்தின் பங்காளியாகிறது இந்தியா?

ஹம்பாந்தோட்டை, மத்தள விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை அமைப்பது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு