2500 வீடுகளை அமைக்கத் திட்டம்

எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத் திட்டத்தினை அமைத்து தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து யாழ். திருமறைக் கலா மன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த தச்சுத் தொழில் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தச்சுத் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாணத்தில் 2551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகள் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020ஆம் ஆண்டுகளில் குறிப்பாக, நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வடமாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும் எனவும், தேசிய வீடமைப்பு அமைச்சினால் புதிதாக குடிநீர் மற்றும் மின்சாரம் வசதிகள் உள்ளடங்கலாக கட்டப்பட்டுவரும் 49 வீடுகளும் திறந்து வைப்பதற்கு தான் 49 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 03 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டுமென்பதே தமது நோக்காக இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் எந்தவிதத்திலும் மத மற்றும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில், சகோதரத்துவத்தினையும் அன்பை, சமாதானத்தினையும் பகிர்ந்து வாழ வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு