சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க தொடர்ந்து உழைப்போம் – ஜனாதிபதி

எத்தகைய நிந்தனைகள், குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தாலும் சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி எச் வலயத்திலுள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்ததுடன், ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகம், வீண்விரயம், உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டத்திற்கு சீராக கடத்தப்பட்ட யுகம் ஒன்று காணப்பட்டது. அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது பல பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவற்றை மாற்றுவது கடினம் என்றாலும் படிப்படியாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசியலுக்கு வருகின்றவர்கள் மோசடிகளை நிறுத்த வேண்டுமென நினைத்தாலும் அரசியலுக்குள் பிரவேசித்ததன் பின்னர் அவர்களும் மோசடிக்காரர்களாக மாறுவதனாலேயே மக்கள், அனைவரையும் குற்றவாளிகளாக நோக்குவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு