உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் செய்தி

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் அடுத்த கல்வி தவணை ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒதுக்கீடுகளின் பிரகாரம், இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்கமைய ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இந்த டெப் கணனிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெப் கணனிகள் ஊடாக பாட விதானத்துக்குட்பட்டதும், அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளுக்குள் சென்று கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், இதற்கு ஏற்புடையதாக கல்வியமைச்சின் வலைத்தளமும் சீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு