உத்தரப் பிரதேசத்தில் 60 குழந்தைகள் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோராக்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 சிறுவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் கடந்த 02 நாட்களில் மாத்திரம் 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் அதிகமானோர் புதிதாக பிறந்த குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருத்துவமனையில் ஒக்சிஜன் எனப்படும் பிராணவாயு வழங்கலில் இடம்பெற்ற தாமதமே இதற்கான காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு உத்தரப் பிரதேச அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு