கல்குடாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்

நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் கல்குடா தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியால் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அமைச்சர் ஹக்கீம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் கணக்காளர் எச்.எம்.எம்.றியாலின் வேண்டுகோளின் பேரில் கல்குடா பிரதேசத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கு நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக 450 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச உள்ளக கொங்கிரீற் வீதிகளுக்கு ஒரு கோடி 60 இலட்சம் ரூபாவும், ஓட்டமாவடி சுற்று வட்டத்திலிருந்து வாழைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயல் வரையான வீதியை கார்பெட் வீதியாக மாற்றுவதற்கு 05 கோடியும், மாஞ்சோலை – மீராவோடை வெள்ளத் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ஒரு கோடியும், காவத்தமுனை சிறுவர் பூங்காவுக்கு 50 இலட்சமும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு