இலங்கையில் மின்சார ரயில்

மின்சார ரயில் சேவையினை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஆரம்பகட்டமாக தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹல் சோமவீர தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், 158 கிலோமீற்றர்களை கொண்ட பாணந்துறை பொல்கஹவலை, கோட்டை நீர்கொழும்பு களனிவெளி ரயில் பாதைகளில் இந்த மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு