மீதொட்டமுல்ல குப்பைகளை கொட்டுவதற்கு இடமளிக்க முடியாது – அமைச்சர் ரிஷாத்

கொழும்பு, மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பைகளை, புத்தளம், அருவக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் நகர இளைஞர்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு, புத்தளத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, ரயில் மூலம் கொண்டுவந்து, புத்தளம், அருவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டம் தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டபோது, தனக்கும் அமைச்சர் சம்பிக்கவுக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் முரண்பட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்ட அமைச்சர்களும், இந்தத் திட்டத்துக்கு எதிராக, தன்னோடு சேர்ந்து குரல் கொடுத்ததுடன், இத்திட்டத்தை, புத்தளத்தில் நடைமுறைப்படுத்த, எமது கட்சி முழு எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு, புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுமதியைப் பெற்று, திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதன்போது கூறியதாகவும், புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், ஆனமடுவ, வென்னப்புவ போன்ற உறுப்பினர்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால், அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் பிரயோசனம் இல்லை என்றும், முதலில் புத்தளம் பிரதேச மக்களுடைய விருப்பத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு