சுய விருப்பில் விலகமாட்டேன் – டெனீஸ்வரன்

சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லையென வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் கூட்டம் கடந்த 12ஆம் திகதி வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு தனது நிலைப்பாட்டினை தெளிவாகத் தெரிவித்த போதிலும், ஒரு சில தினங்களில் அமைச்சுப் பொறுப்பை விட்டுத்தருவது தொடர்பில் முடிவெடுத்து தெரிவிக்குமாறு குறிப்பிட்ட நிலையில், தனது சுயவிருப்பின் பேரில் பதவி விலகப் போவதில்லையென டெனீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு