வடக்கில் நடைபெறும் செயற்பாடுகளுக்குப் புலிகளை தொடர்புபடுத்துவது தவறு – இராணுவத் தளபதி

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையின் வடக்கில் இடம்பெறும் எந்த செயல்களுக்கும் விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்துவதானது மக்களைத் தவறாக வழிநடத்துவதாக அமையுமென இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வடக்கில் இடம்பெறும் வன்செயல்களுக்கு விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்துவதை தாம் விரும்பவில்லை எனவும், தெற்கில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு 1971ஆம் ஆண்டு கிளர்ச்சிப் பிரிவுகளின் பெயர்களை பயன்படுத்த முடியாது என்பது போலவே வடக்கில் இடம்பெறும் செயல்களுக்கும் விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் செய்யும் செயலுக்காக புனர்வாழ்வுபெற்ற 12 ஆயிரம் பேரையும் குற்றம் கூறுவது சிறந்ததல்ல என்றும் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.