ஓய்வெடுக்கும் பிக் பென் கடிகாரம்

இலண்டன் மக்களை, காலையில் எழுப்பி வந்த, ‘பிக் பென்’ கடிகாரம், இம்மாதம் 21ஆம் திகதி முதல் இயங்காது அமைதியாகவுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சுமார் 04 ஆண்டுகளுக்கு இந்தக் கடிகாரம் ஒலிக்காது எனவும், இக்கடிகாரத்தின் பராமரிப்பு பணிக்காக, 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், வழக்கமாக இயங்காவிட்டாலும், புதுவருடம் உள்ளிட்ட மிக முக்கியமான நிகழ்ச்சிகளின் போது, மணி ஒலிக்கும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 1856ஆம் ஆண்டிலிருந்து ‘பிக் பென்’ கடிகாரம், மணி ஒலித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு