சிராந்தி ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஷ பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலிய அமைப்பிற்கு சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் வசீம் தாஜுதீனின் படுகொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, ரோஹித ராஜபக்ஷ இன்று முற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் சுப்ரீம் செட் – 1 என்ற செய்மதி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே ரோஹித ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ சுப்ரீம் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவின் பிரதான பொறியியலாளராக பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு