முகுந்தன் கனகே பதவி இராஜினாமா

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ சபையிடம் கையளித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பு துறையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதுவித ஊழல், மோசடியில் அல்லது அதற்கு துணை நிற்கும் விடயங்களில் தான் ஈடுபடவில்லையென தனது இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு