சூதாடிய எண்மர் கைது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் சூதாடிய குற்றச்சாட்டில் 08 பேர், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, திருகோணமலை, பூவரசந்தீவு, குட்டிக்கராச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள், இரவு வேளைகளில் சூது விளையாடி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், சூதாடுவதற்குப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஒரு தொகைப் பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட 08 பேரையும், பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் 24ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணித்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு