ஆவா சந்தேகத்தில் இளைஞன் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரின் முகநூலில் ஆவா குழுவிவைச் சேர்ந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட குறூப் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞரை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விஷேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் Nதெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு