இந்தியாவின் திட்ட வரைபை ஆராய குழு நியமனம்

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்தியாவின் திட்டவரைபை ஆராய்வதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த குழுவை நியமித்துள்ளார். குறித்த விமான நிலையத்தினால் 15.6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விமான நிலையத்தை நிர்வகிப்பதற்கு இந்தியாவின் நிறுவனம் ஒன்று முன்வந்து, தமது திட்டவரைபை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு