சிறந்த சாரதிகளைத் தெரிவு செய்யும் திட்டம்

பிரதான வீதிகளில் வாகனத்தைச் செலுத்தும் முறை மற்றும் சிறந்த வாகன சாரதிகளைத் தேர்ந்தெடுக்கும் வேலைத்திட்டம் ஆகியவற்றை, பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்ததன் விளைவாக, பிரதான வீதிகளில் பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் வீதி சமிக்ஞையை உரியமுறையில் அவதானித்துச் செயற்படுதல் உள்ளிட்ட காரணங்கள் பல வெற்றியீட்டப்பட்டுள்ளன.

இதில் வெற்றியீட்டிய சாரதிகளை அடையாளம் காணும் முகமாக, அவர்களின் வாகனங்களில் இன்று (15) விஷேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு