இந்தியா – சீனா எல்லையில் கல்வீச்சு மோதல்

இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இரண்டு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் நேற்று கல்வீச்சு மோதல் இடம்பெற்றுள்ளது.

லடாக்கிலுள்ள புகழ்பெற்ற பங்கொங் ஏரி ஊடாக சீனாவின் படையினர் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்திய படையினர் மனித சங்கிலியை உருவாக்கி அவர்களின் எல்லை மீறலை முறியடித்துள்ள போதிலும், சீனப் படையினர் கற்களை வீசி இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியப் படையினரும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் இரு தரப்புப் படையினரும் காயமடைந்துள்ள போதிலும், இவ்விடயம் குறித்து இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் இன்னும் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு