இலங்கை கடல்சார் கேந்திரநிலைய முக்கியத்துவத்தை தக்கவைக்க சிறந்தவழி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பொது தனியார் ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையை, இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.

குறித்த சம்மேளனம் விடுத்துள்ள விஷேட அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ஊடாக அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம், இலங்கை கடல்சார் கேந்திரநிலைய முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள சிறந்த வழி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நடவடிக்கை ஊடாக, அதிக வெளிநாட்டு முதலீடுகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு