விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் யோஷித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

வாகனம் ஒன்றின் நிறத்தை மாற்றியமை தொடர்பிலான விசாரணையில் வாக்குமூலம் பெறுவதற்காகவே தான் அழைக்கப்பட்டிருப்பதாக யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்களிடம் விசாணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர, சீனாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுப்ரீம் செட் 01 செய்மதி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ரோஹித ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் நேற்று ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு