நல்லூரானுக்கு திருக்கார்த்திகை திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று மாலை விமர்சையாக இடம்பெற்றது.

குறித்த ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி விமர்சையாக இடம்பெற்று வருகிறது.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ குமரகுருபர சிவாச்சாரியார்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருக்கார்த்திகைத் திருவிழாவை நடாத்திவைத்தனர்.

அலங்காரக் கந்தனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்று அங்கிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்வீதி வலம்வந்து வெளிவீதியில் மயில், மற்றும் அன்ன வாகனத்தில் கார்த்திகை திருமனையில் வீற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் பெருந்திருவிழாவாக இன்று காலை சந்தான கோபாலர் உற்சவமும், மாலை கைலாச வாகன உற்சவமும், 17ஆம் திகதி நாளை கஐவல்லி மஹோவல்லி திருவிழாவும் மாலை வேல் விமான திருவிழாவும் 18ஆம் திகதி காலை தண்டாயுபாணி திருவிழாவும் மாலை ஒரு முகத் திருவிழாவும், 23ஆம் திகதி 19ஆம் திகதி சம்பறத்திருவிழா 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை தீர்த்தத் திருவிழாவுடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு