அண்மைய வன்முறைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை

யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லையென புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்வதாக வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தம்மால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,190 பேர் யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலோ எவ்விதமான வன்முறையான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. அதேபோன்று சட்டவிரோதமான சம்பவங்களுடனும் அவர்கள் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் போலவே, தென்பகுதியிலும் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதாக பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறானவர்கள், தங்களுடைய நிகழ்ச்சி நிரலின் ஊடாக, தங்களுடைய நோக்கத்தை அடிப்படையாக வைத்து, பொய்யான பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும், பொய்யான பிரசாரங்கள் ஊடாக, மனிதர்களின் மனதை மாற்றி, நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமெனத் தான் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு