சியரா லியோனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

சியரா லியோனில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தின் ஊடாக அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

சியரா லியோனில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதுடன், 600ற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மீட்புப் பணிகளுக்காக அனைத்து அமைப்புகளிடமிருந்தும் அந்நாட்டு ஜனாதிபதி உதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு