கிளிநொச்சியில் டெங்கு அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில், டெங்கு நுளம்பு பரவலும் அதிகரித்துள்ளது. இதுவரையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 815 நோயாளர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்பு பரவாத வண்ணம் சுத்தமாக பேணுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு