ஆவா முக்கிய புள்ளியை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ஆவா குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச்செயல்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள் வெளிநாட்டில் இருந்தவாறு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் ஜேர்மனியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தெரிவித்த குறித்த தகவலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம், குறித்த சந்தேக நபரை நாடு கடத்த ஜேர்மனியிடம் கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்னணியில் ஆவா உறுப்பினர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை சுமார் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு