கலப்புமுறை தேர்தலுக்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில்

கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மஹிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளதுடன், இது குறித்து நேற்றையதினம் மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாக, அரசாங்கத்தை உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் உந்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதே தங்களின் திட்டம் என்றும் ரோஹித்த அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு