யாழில் தேங்காய் விலை உயர்வு

யாழ். குடாநாட்டில் தேங்காய் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்றைய தினம் 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள அதேநேரம், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 50 ரூபாவாகவும், 30 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

யாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையாலும், குடாநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையாலும் சந்தைகளில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு