ஆட்கள் பற்றாக்குறையில் சட்டமா அதிபர் திணைக்களம்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கும் ஆவணங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைக்கு போதுமான ஆட்கள் திணைக்களத்தில் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் என்.ஆர். அபேசூரிய தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து வடமேல் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், விஷேடமாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக அதிகளவான ஆவணங்கள் கிடைக்கப் பெறுவதாகவும், அவை சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு